Saturday, 30 August 2014

றைஸ் பக்கெட் சவால் எதற்காக?

மேற்கத்திய நாடுகளில் துவங்க பட்ட ஐஸ் பக்கெட் சவால் ஏ.எல்.எஸ் என்னும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புண‌ர்வு ஏற்படுத்த முற்பட்டது. இதில் பங்கேற்போர் தங்களுடைய தலையில் ஒரு  வாளி ஐஸ் நீரை கொட்டிக் கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் வேரு ஒருவருக்கும் இந்த சவாலினை விடுக்க வேண்டும். மேலும் அவர்கள் ஏ.எல்.எஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள  ஏ.எல்.எஸ் அசொசியேசன் போன்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கிட வேண்டும். இதில் பல பிரபல‌ங்கள் பங்கேற்க உலகளவில் இது பிரபலமடைந்தது. இதனை தொடரிந்து இந்தியாவில் றைஸ் பக்கெட் என்று துவங்கபட்டது. இதுவும் இந்தியாவில் பிரபலமடைந்தது வருவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இந்தியாவின் றைஸ் பக்கெட் பிராமணத்துவத்தின் மற்றொரு பரிமாணமே. இந்தியாவின் வறுமை உலகறிந்ததே. றைஸ் பக்கெட் கொடுத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் ஒரு பக்கெட் றைஸ் வறுமையை ஓழித்துவிடப்போவதுமில்லை. வறுமையை ஓழிக்க ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு வழிவகுக்க வேண்டும். அதை விடுத்து றைஸ் பக்கெட் போன்ற் விளம்பர யுத்திகளால் விலைய போவது ஒன்றுமில்லை. மாறாக இது தானம் கொடுத்து, பிச்சை அளித்து புன்னியம் தேடிக் கொள்வது என்ற பிராமணத்துவத்தின் இனைய வெளிப்பாடாகவே உள்ளது.

No comments:

Post a Comment